டெல்லி:
இன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படும் நிலையில், பாஜக உள்பட அனைத்துக் கட்சித்தலைவர்களும், இந்திய கடற்படைக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக எம்பி மனோஜ் திவாரி, தனது வலைதள பக்கத்தில் அமெரிக்க கொடி பறக்கும் போர்க்கப்பலை படத்தை, பாஜக தலைவர் ஜேபிநட்டா உள்பட பலரது படங்களுடன் தனதுபடத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார்… இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பாஜகவினரின் தேசப்பற்றை காரி உமிழ்ந்து வருகின்றனர்.

டெல்லி வட கிழக்கு, எம். பி.யினா மனோஜ் திவாரி தனது வலைதளத்தில் இந்திய கடற்படை தினத்திற்கு வாழ்த்து கூற போட்டிருக்கும் போர்க்கப்பல் படத்துடனான பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
எம்.பி.யான மனோஜ் திவாரியின் தேசப்பற்று இந்தியாவுக்கா, அமெரிக்காவுக்கா என்று கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் தேசப்பற்று குறித்து பேச அருகதை அற்றவர்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மனோஜ்திவாரி பதிவிட்டுள்ள படத்தில், அமெரிக்க கொடி பறக்கும் போர்க்கப்பல் இடம் பெற்றுள்ளது. அத்துன் ஒருபுறம் அவரது படமும், மற்றொரு புறத்தில், பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா பெயரும் இடம் பெற்றுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் படம் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் பாதுகாப்பு துறையை கட்சி விவகாரங்களுக்காக, கட்சி விளம்பரம் போல மனோஜ் திவாரி பதிவிட்டுள்ளதுடன், நாட்டின் விதிமுறைப்படி இடம்பெற வேண்டிய, நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் இந்திய கடற்படை தினத்துக்கு வாழ்த்து கூறிய திவாரி, அமெரிக்க கொடி பறக்கும் போர்க்கப்பலின் படத்தைபதிவிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமுக வலைதளங்களில் பாஜகவின் தேசிப்பற்று குறித்து நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்….
[youtube-feed feed=1]