சென்னை: இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக பிரமுகர் கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சமூக அமைதியை குலைக்கும் விதத்தில் பேசிய விவகாரத்தில், பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2021ம் அண்டு இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தொடர்ந்து அவர்மீதான வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இரு தரப்பினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில்,  பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்த கல்யாணராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.