ஞ்சை

ஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரியைக் கிறித்துவர் என பாஜக தலைவர் எச்  ராஜா கூறும் பொய்த்தகவல் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.  அவர் தமது பள்ளியில் தம்மை கிறித்துவ மதத்துக்கு மாறச் சொல்லி கொடுமைகள் செய்ததால் தற்கொலை செய்து கொண்டார் என ஒரு தக்வல் பரவியது.   இதனால் மக்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது..

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜக தொடர்ந்து இது குறித்து போராடி வருகிறது.   அதே வேளையில் பள்ளி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் மாணவி  லாவண்யாவை மதம் மாறச் சொல்லி வறுபுறுத்த்வில்லை என கூறி வருகின்றன.    இது  குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரி ரவளி ப்ரியா என்பவர் அந்தப்  பள்ளியில்  மதமாற்ற முயற்சி நடக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் எச் ராஜா ஒரு கூட்டத்தில், “மதமாற்றம் நடக்கவில்லை என அதிகாரி ரவளி ப்ரியா கூறுகிறார்.    அவர் பெயரைப் பார்த்தால் அவரே கிறித்துவர் எனத் தெரிகிறது..  இதைப் போல் ஆட்சியரிடம் மனு கொடுக்கப் போனால் அவரும் கிறித்துவராக உள்ளார்.    இது போல் தமிழகத்தில் பல உயரிய பதவிகளில் கிறித்துவர்கள் உள்ளனர்.” எனப் பேசி உள்ளார்.

அவர் குறிப்பிட்ட ரவளி ப்ரியா என்னும் அதிகாரி கிறித்துவர் அல்ல என தற்போது தெரிய வந்துள்ளது.   அவர் குறிப்பிட்டுள்ள ரவளி என்னும், பெயருக்குப் பகவான் கிருஷ்ணரின் பாத கொலுசு ஓசை என்பது பொருளாகும்.

ரவளி ப்ரியா ஏற்கனவே திருவண்ணாமலையில் பணி புரிந்த போது கும்பாபிஷேகம் மற்றும் இரு சித்ரா பவுர்ணமி விழக்களை திறம்பட நடத்தி உள்ளார்.   மேலும்  அவர் திண்டுக்கல்லில் பணி புரிந்த போது அனைத்து  பண்டிகைகளுக்கும் பழனி முருகன் கோவிலுக்குச் செல்வது அவரது வழக்கமாகும்.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :