சென்னை
பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டர் பக்கம் மத மோதல்களைத் தூண்டும் பதிவுகள் காரணமாக முடக்கப்பட்டுள்ளது.
டிவிட்டரில் பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும் விதமாக பதிவுகள் இடுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையொட்டி கல்யாண ராமன் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக காவல்துறையினர் கல்யாணராமனின் டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்துள்ளன.ர் ஆய்வு முடிவில் அவர் தொடர்ந்து டிவிட்டரில் மத கலவரங்களைத் தூண்டும் விதமாகப் பதிவு செய்துள்ளதாகவும் அவரது பக்கத்தை முடக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் டிவிட்டரில் நிர்வாகத்துக்கு பரிந்துரை அளித்தனர்.
இதையடுத்து டிவிட்டர் நிர்வாகமும் கல்யாணராமன் டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை காவல்துறையினரின் பரிந்துரையின் பேரிலும் பாஜக தலைவர்களில் ஒருவரான கல்யாணராமனின் டிவிட்டர் பக்கத்தை டிவிட்டர் நிர்வாகம் முடக்கி உள்ளது.