சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் 4 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.  இதுவரை வெளியான தகவலின்படி திமுக அதிக இடங்களில் முன்னிலையிலும் இரண்டாவதாக அதிமுக முன்னிலையிலும் உள்ளன.

மத்திய ஆளும் கட்சியும் அதிமுக கூட்டணிக் கட்சியுமான பாஜக தற்போது 4 இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளது.  தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டல் எல் முருகன்(தாரபுரம்) , அண்ணாமலை (அரவக்குறிச்சி), நயினார் நாகேந்திரன், வினோஜ் பி செல்வம் (துறைமுகம்), ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.