எடியூரப்பாவின் ’’மூக்கறுத்த’’ பா.ஜ.க.மேலிடம்..

வயதானவர் என்பதால் எல்.கே.அத்வானியையே ஓரம் கட்டிய பா.ஜ.க.மேலிடம் , கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிடம், கருணை காட்டி வந்தது.

தனது விதிகளை மாற்றிக்கொண்டு, அவரை கர்நாடக முதல்வர் நாற்காலியில் நீடிக்க அனுமதித்தது, பா.ஜ.க. தலைமை.

எடியூரப்பாவுக்கு எதிராக, கர்நாடக மாநில பா.ஜ.க..வில் தனி அணி உருவாகியுள்ள நிலையில், அவர் மீது டெல்லி மேலிடம் அதிருப்தியில் இருந்தது.

அந்த அதிருப்தி இப்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.

கர்நாடகத்தில் வரும் 19 ஆம் தேதி 4 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்யத் தேர்தல் நடக்கிறது.

2 இடங்களில் பா.ஜ.க. ஜெயிக்க முடியும் என்ற நிலையில், 3 வேட்பாளர்களைச் சிபாரிசு செய்து டெல்லி மேலிடத்தின் ஒப்புதலுக்கு எடியூரப்பா அனுமதியுடன்  அனுப்பியது, கர்நாடக பா.ஜ.க.மேலிடம்.

அந்த 3 வேட்பாளர்களையும் நிராகரித்துள்ள பா.ஜ..க.மேலிடம் மாநிலத்தில் பெரிதாக  அறிமுகம் இல்லாத 2 பேரை பா.ஜ.க.. வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

இதனால், கதி கலங்கி நிற்கிறார், எடியூரப்பா.

தேர்தல் முடிந்த பின், தனது முதல்வர் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார், எடியூரப்பா.