நாகப்பட்டினம்

பாஜக அரசால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து  போட்டியிடுகிறது.  இந்த கட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலி போட்டியிடுகிறார்.  அவரை ஆதரித்து நேற்று பிரச்சரக்கூட்டம் திருக்குவளையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.  அவர் தனது உரையில், “தமிழகத்தை பாதுகாக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.  அவர் முதல்வரான உடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்றுவார்.

பாஜக அரசல் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.  இதனால் சிறுதொழில்கல் அழிக்கப்பட்டு வருகின்றன.  மனிதத்தன்மை உள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.  நான் அனைவருக்கும் மனிதத்தன்மை இருக்க வேண்டும் என்பதைக் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டேன்” எனக் கூறி உள்ளார்.