தூத்துக்குடி:

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பபோது,  பாஜக அரசு நாட்டை சீரழித்து விட்டது என்று குற்றம் சாட்டியில், மக்களின் தோளோடு தோள் நின்று பணியாற்றுவேன் என்று உறுதியளித்தார்.

ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை தனது  தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், திமுக தலைவர்கள், வேட்பாளர்கள்  ஆங்காங்கே தேர்தல் பிரசாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில், முன்னதாக  தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் அமைந்துள்ள காமராஜர், அண்ணா,  இந்திரா காந்தி, உள்ள முத்துராமலிங்க தேவர் போன்றோர் சிலைகளுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தூத்துக்குடி 3ம் மைல் பாலத்தில் இருந்து திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் உதயசூரி யனுக்கு ஆதரவு கேட்டு தெருத்தெருவாக சென்றார். அவருடன் கீதா ஜீவன் உள்பட தூத்துக்கு மாவட்ட திமுக வினர்  உடன் சென்றனர்.

பின்னர்,  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியவர், ‘மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டை சீரழித்து விட்டது என்று குற்றம் சாட்டியவர்,  தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் தொழில் வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்று கூறினார். தான் வெற்றி பெற்றால்,  மக்களின் தோளோடு தோள் நின்று பணியாற் றுவேன் என்றும் உறுதி கூறினார்.