சென்னை:

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது, ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிப்பதற்கான முன்னோட்டம் என கருதப்படுகிறது.

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்பதோடு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. பசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது இந்த விதிமுறைகளின் அடிப்படை.

இதில்,. மாடுகளின் கொம்புகளை சீர் செய்வது, அவற்றில் வர்ணம் பூசுவதும் கொடுமைப்படுத்துதல் என்கிறது இந்த விதி. இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகளுக்கு அலங்கரித்து ஆபரணங்கள் அணிவித்து மகிழ்வது தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கமாகும். இதைத் தடை செய்திருக்கிறது இந்த புதிய சட்டம்.

மேலும், மோசமான வானிலையில் மாடுகளை வைத்திருக்கக்கூடாது என்கிறது சட்டம். அப்படியானால் மழைக்காலங்களில் ஏழை விசாயிகள் என்ன செய்வார்கள்.

“இப்படி கொம்புகளை சீர் படுத்தக்கூடாது, வர்ணம் தீட்டக்கூடாது. மழையில் மாடுகளை நிறுத்தக்கூடாது என்று சட்டம் போடுபவர்கள்.. ஏற்கெனவே தாங்கள் எதிர்த்த ஜல்லிக்கட்டு விழாவை நடத்த விடுவார்களா” என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு முன்னோட்டமாக இந்த சட்டம் இருக்குமோ என்ற அச்சம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.