ண்டிகர்

ண்டிகரில் பெண் கடத்தல் முயற்சியில் கைது செய்யப்பட்டுள்ள பா ஜ க தலைவர் மகன் பற்றி பெண் எம் பி ஒருவர் இது இளமையின் தவறு என குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா மாநில  பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து தனக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாகவும் கடத்த முயன்றதாகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் வர்ணிகா காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.   தற்போது இருவரும் காவலில் உள்ளனர்.

இது குறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜிந்த் தொகுதியின் பா ஜ க பெண் எம் பி பிரேமலதா சிங் இது இளமையின் தவறு என குறிப்பிட்டுள்ளார்.  தவிர அந்தப் பெண்ணின் தைரியத்தையும் பாராட்டியுள்ளார்.  தவிர தேவையில்லாமல் விகாஸ் பராலாவின் தந்தை சுபாஷ் பராலாவின் பெயரை இந்த சம்பவத்தில் இழுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]