சென்னை: தமிழக பாஜகவை சேர்ந்த சவுதாமணி, போலியான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக,  தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக கட்சியை சேர்ந்த சவுதாமணி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

சமூக வலைதளத்தில் மதக்கலவரத்தை தூண்டுதல்,  பொதுஅமைதிக்கு குத்தகம் விளைவிப்பது ஆகிய செயல்களுக்காக, அவர்மீது  2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், அவரை இன்று கைது செய்தனர்.

முன்னதாக அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜக இளைஞரணி நிர்வாகியைத் தொடர்ந்து பெண் நிர்வாகி மீது சைபர் கிரைம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு