சென்னை:
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் பாஜக அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா ஆகியோர் சந்தித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்ளான யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா ஆகியோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் யஷ்வந்த் சின்கா பாஜக.வில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் இவர்கள் சென்னையில் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.