டில்லி:

மிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. பரபரப்பான பல அரசியல் நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அதே நேரம் ஓ..பி.எஸ். அணியினர் இதை ஏற்கவில்லை. கட்சியின் இரட்டை இலை சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

ஆகவே பிரச்சினை இத்தோடு ஓய்வதாக இல்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா இன்று செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பெரும் தடையாக இருப்பது மத்திய பாஜக அரசுதான். அந்த மாநில மக்கள், நிலையான அரசு வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதற்கு மோடி அரசுதான் கடந்த ஒருவாரமாக தடையாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.