சென்னை: சென்னை மாநகராட்சி மன்றத்தில் திமுக இளம் கவுன்சிலர் நிலவரசி அருகே பாஜக உறுப்பினர் உமா ஆனந்தனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை  மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர் கள் இன்று பதவி ஏற்று வருகின்றனர். கவுன்சிலர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்போது, திமுக கவுன்சிலர்கள் ‘கலைஞர்’ கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி, அவர்கள் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். சிலர் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அதிமுக உறுப்பினர்கள் பதவி ஏற்கும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், இபிஎஸ் ஓபிஎஸ்-ஐயும் வாழ்த்தினர். அதுபோல, காங்கிரஸ் கவுன்சிலர்கள் ராகுல் காந்தியை பாராட்டினர்.

இந்த மாமன்றத்தில் வார்டுகளின் எண்ணிக்கை வரிசைப்படி  மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விரும்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  22 வயதான இளம் கவுன்சிலர் நிலவரசி துரைராஜ், அருகே மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க உறுப்பினர் உமா ஆனந்தனுக்கு  இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும்  இடையில் 135 வார்டில் வெற்றி பெற்ற விசிக உறுப்பினர் சாந்தி என்ற ஆஷினி க்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று கவுன்சிலராக பதவி ஏற்க உள்ள 200 வார்டுகளின் உறுப்பினர்கள் விவரம்: