மதுரை:
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவின் நண்பர்கள் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எங்கள் ஒரே எதிரி திமுக மட்டுமே என்றும், பாஜகவும், காங்கிரசும் அதிமுகவின் நண்பர்கள் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் இணைத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

சில படங்கள் ஹிட் கொடுக்கும் விஷால் அரசியலுக்கு வந்துள்ளார். பல படங்கள் ஹிட் கொடுக்கும் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.