சண்டிகர்:
அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறாத நிலையில், துஷ்யந்த் சவுதலா கட்சி ஆதரவு மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதைத்தொடர்ந்து, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரப்பட்ட நிலையில், நாளை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இன்று பாஜக சட்டமன்ற தலைவராக ஒருமனதாக மனோகர் லால் கத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.

90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநிலத்தில் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 24ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பாஜகவுக்கு 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும் 31 இடங்களை மட்டுமே பெற்றதால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், அங்கு 10 இடங்களை கைப்பறியிருந்த தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சியை வளைக்க பாஜக காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி ஆசைக்காட்டி பாஜக தன்வசம் இழுத்தது. மேலும் பல சுயேட்சைகளும் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.
இதன் காரணமாக, அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பதவி ஏற்பு விழா நாளை நடைபெறுவதாக அறிவிக்கட்பபட்டு உள்ளது.
முதல்வராக மனோகர் லால் கத்தார் பதவி ஏற்க உள்ளார். துணை முதல் மந்திரியாக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்க உள்ளார். மேலும் சவுதலா கட்சியைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]