மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறி குழுக்களே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியின அமை்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தவல்களை அளித்துள்ளதாகவும் போதுமான உத்தரவாதத்தை அளிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும் பழங்குடியின அழிப்பில் மத்திய மாநில அரசுகள் இணைந்து முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே 81 குக்கி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டதாகவும் 31000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாகவும் ஜீன் 9ம் தேதி இந்த அமைப்பு சமர்பித்துள்ள புதிய மனுவில் தெரிவித்துள்ளது.
141 கிராமங்கள் 237 சர்ச்சுகள் மற்றும் 73 நிர்வாக குடியிருப்புகள் வன்முறைக்கு தீக்கிரையானதாக தெரிவித்துள்ளது.
இருகுழுக்களிடையே நடைபெறும் மோதலாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகிறது. உண்மையில் கிருத்தவ பழங்குடியினத்தை அழிக்கும் நோக்கத்துடன் பாஜக ஆதரவு மதவெறிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மனிப்பூர் வன்முறைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியினர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]