தைசுங், தைவான்

விர்சுவல் கரன்சி என சொல்லப்படும் கண்ணுக்கு தெரியாத பிட் காயினையும் கொள்ளை அடித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தைவான் நாட்டில் உள்ள தைசுங் என்னும் நகரில் வசிக்கும் இளைஞர் பிட் காயின் வர்த்தகம் செய்பவர்.   அவர் பெயர் தை.   அவரிடம் மூன்று 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் தொடர்பு கொண்டு பிட் காயின் வாங்க விரும்புவதாக கூறி உள்ளனர்.   பிட் காயின் என்பது கண்ணுக்கு தெரியாத பணமாகும்.   இதை வங்கிகள் மூலமாக மட்டுமே மாற்ற முடியும்.

தையிடம் பிட் காயின் உள்ளதை உறுதி செய்துக்கொண்ட மூன்று இளைஞர்களும் அவரை அடித்து உதைத்து அவருடைய மொபைல் ஃபோனை பிடுங்கிக் கொண்டுள்ளனர்.    அவருடைய கணக்கில் இருந்த பிட்காயின்ககளை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டனர்.    மாற்றப்பட்ட பிட் காயின்களின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடி ஆகும்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த தைவான் நாட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.   இந்தக் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் ஷிஹ் என்னும் இளைஞர் என கண்டு பிடித்துள்ளனர்.  அதன் பின் ஷிஹ் மற்றும் கொள்ளை செய்த மூவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.   பிட் காயின் கொள்ளை அடிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.