ஹரியானா:
ஹரியானா மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சில கடைகளில் மாட்டிறைச்சி பிரியாணி விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாட்டிறைச்சி தடை செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் பிரியாணிக் கடைகளில் மாட்டிறைச்சி இருக்கிறதா என்ற தீவிர பரிசோதனையில் அந்த மாநில அரசு இறங்கியிருக்கிறது.

ஹரியானா மாநிலத்தை முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆளுகிறது. இந்துத்துவக் கருத்துக்களில் வேரூன்றிய இவரது அரசு மாட்டிறைச்சி விற்பனையை தடைசெய்யும் முயற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நடைபெற்ற ஒரு கலந்தாய்வில் பசு பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்களால் நடத்தப்படும் பிரியாணிக்கடைகளில் இருந்து பிரியாணி சாம்பிள்கள் பெறப்பட்டு அவற்றில் மாட்டிறைச்சி கலந்திருக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஃப்தாப் அகமது வன்மையாக கண்டித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்குடனேயே மாநில அரசு இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel