டெல்லி: பிரபல ஆன்லைன் உணவுப்பொருள் நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியர்களின் மனம் கவர்ந்த விரும்பிய உணவாக பிரியாணி இடம்பெற்றுள்ளது. 7வது ஆண்டாக இந்த ஆண்டும், உணவு டெலிவரியில் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும், மக்கள் அதிகம் விருபி வாங்கும் முக்கிய 10 பொருட்களில் பாப்கார்ன், குலோப் ஜாமுன் போன்றவை முன்னணியில் உள்ளது.
இன்றைய டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, உணவுப்பொருட்கள் உள்பட அனைத்துமே ஆன்லைனில் எளிதாக கிடைத்து வருகிறது. இதனால், மக்கள் சோம்பேறியாகி வருகின்றனர். இருந்த இடத்திற்கே அனைத்து பொருட்களை ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரி செய்து வருகின்றனர். இதனால், மக்கள் மழை, வெயில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆன்லைனையே நம்பி வருகின்றனர். நகர்ப்புறங்களில் இது தான் இப்போது டிரெண்டிங் ஆக மாறி இருக்கிறது.
இதையடுத்து, பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களது பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. குறிப்பாக உணவு பொருட்களை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்து வருவதில், ஸ்விக்கி, சொமட்டோ போன்ற நிறுவனங்கள், தங்களது ஆப்கள் மூலம் உணவுகளை ஆர்டர் பெற்று, வீடுகளுக்கே டெலி வரி செய்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆன்லைன் உணவுப்பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் ஆண்டுதோறும், மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களைவெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு மற்றும் ஸ்நாக்ஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் ஸ்விக்கி மூலம் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் 7வது ஆண்டாக பிரியாணி தான் முதலிடம் வகிப்பதாகவும் ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்முலம் இந்தியர்களின் மனம்கவர்ந்த உணவாக பிரியாணி இடம்பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகபட்சமாக ஒரே ஆர்டரில் 75ஆயிரத்து 378 ரூபாய்க்கு பெங்களூரைச் சேர்ந்த பயனர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார் என்று கூறியிருப்பதுடன், அதற்கு அடுத்தபடியாக, ஒரே ஆர்டரில் புனேவைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வகையில், ரூ.71,229 செலவில் பர்கர், ஃப்ரைஸ் வாங்கியுள்ளார் என்ற விவரங்களையும் தெரிவித்து உள்ளது.
அத்துடன் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட முதல் 10 ஸ்நாக்ஸ் வகைகளையும் பட்டியலிட்டு உள்ளது. அதில் முதலிடத்தில் பார்கார்ன் இடம்பிடித்துள்ளது.
பாப்கார்ன், சமோசா, பிரஞ்சு ஃப்ரைஸ், பாவ் பாஜி, ஹாட் விங்ஸ், பூண்டு பிரட்ஸ் டிக்ஸ், கிளாசிக் ஸ்டஃப்டு பூண்டு ரொட்டி, ஹாட் விங்ஸ, டகோஸ், மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை என தெரிவித்து உள்ளது.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்பு வகையில், முதல் 10 ஸ்வீட் வகைகள் விவரம்:
- குலாப் ஜாமூன்
- ரஸ்மலாய்
- சோக்கோ லாவா கேக்
- ரஸ்குல்லா
- சோகோசிப்ஸ் ஐஸ்கிரீம்
- அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம்
- .காஜு கட்லி
- டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம்
- டெத் பை சாக்லேட்
- ஹாட் சாக்லேட் ஃபட்ஜ்
குலாப் ஜாமூன் 2.7 மில்லியன் ஆர்டர்கள் பெறப்பட்டு டெல்லி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், இந்தியர்களின் விரும்பும் இனிப்பில் குளோப் ஜாமுன் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்து உள்ளது. அடுத்ததாக ரஸ்மலாய் 1.6 மில்லியன் ஆர்டர்கள், சோகோ லாவா கேக் 1 மில்லியன் ஆர்டர்கள், ரஸ்குல்லா, சோகோசிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், காஜு கட்லி, டெண்டர் தேங்காய் ஐஸ்கிரீம், டெத் பை சாக்லேட் மற்றும் ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் ஆகியவை அதிக அளவில் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாகவும் ஸ்விக்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.