கோவை உனகவம் ஒன்றில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்திருப்பதாகவும் அதை இந்துக்களுக்கு மட்டுமே விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

கோவை சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இருதரப்பினருக்கு இடையே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவிடப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 9 ட்விட்டர் பயனர்கள் மீது புகார் அளித்ததை அடுத்து கோவை போலீசார் அந்த ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள இந்த 9 பேரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel