டில்லி

தி தீவிர புயலாக வலுவடைந்து வரும் பிபோர்ஜாய் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திங்கள்கிழமை மாலை தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த  தாழ்வுப் பகுதி உருவானது. செவ்வாய்க்கிழமை காலை இத் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது.

பிறகு இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. புதன் அன்று அந்தப் புயல் மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியது. அப்புயல் வியாழக்கிழமை அதிதீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுமையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிபோர்ஜாய் காலை 05:30 மணி அளவில் கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் கோவாவில் இருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 910 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இந்த புயல் அடுத்த 48 மணிநேரத்தில் படிப்படியாக அதி தீவிரமடைந்து வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும். இதனால் புயல் பாதிப்பு இருக்கும் அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றிருப்பவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும்”

என எச்சரிக்கப்பட்டுள்ளது.