சென்னை:
குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களளின் வருகை, இனிமேல் பயோமெட்ரிக் முறை மூலமே கண்காணிக்கப்பட்டு குறிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழக அரசசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு வருகை தராமல், இடையிடையே பள்ளியில் இருந்து வெளியேறி விடுவதாகவும், பணிக்கு வராமலேயே வந்ததுபோன்று அடுத்த நாள் கையெழுத்து இடுவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழ அரசு அனைத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டினை பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இதற்காக ரூ.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தட்டுள்ளது. அதுபோல, இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கான கட்டுபாடுகளை கடைப்பிடிக்கும் வகையில் இனி பயோமெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு குறிக்கப்படும் என தமிழ அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆப்பு வைக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஆசிரியர்களிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது பெரும்பாலான தனியார் பள்ளிகள், தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் சிஸ்டத்தை அரசு துறைகளிலும் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.