சித்தர்கள்… ஆன்மிகவாதிகள்.. இவர்களின் வாழ்க்கையை பலர் பகிஷ்கரிப்பதும உண்டு, ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில், சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களும், அவர்களின் மருத்துவ முறைகளும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது. ஜீவனில் சிவத்தை காணுபவர்களே சித்தர்கள்
இன்றளவும் பல சித்தர்கள், திருவண்ணாமலை போன்ற ஆன்மிக ஸ்தலங்களில் வாழ்த்து வருவதும், பலர் கண்ணுக்குத்தெரியாமலேயே இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது பலருக்கு கேள்வி எழுவதுண்டு.
சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
இதைத் தான் திருமூலரும் பாடலாக கூறியிருக்கிறார்.
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே! என்கிறார்.
இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும் சித்தராவதற்கு முதற்டி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமை யாக அறிந்து கொள்வதாகும்.
மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே! என்கிறார்.
ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
நமது இந்தியா ஒரு ஆன்மிக நாடு. இங்கு ல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் 18 சித்தர்கள் மிகவும் புகல்வாய்ந்தவர்கள்.
சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர்.
சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.
நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக் கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
சித்தர்கள் கூறும் வாழ்வியல் இரகசியங்கள்..
1) படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
2) பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
3) விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
4) காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும் .
5) கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
6) கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும், கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை. இதை தான் எரிச்சல் என்பார்கள் . கண் திருஷ்டி என்பதும். திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
7) நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
8) உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும். இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
9) இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் . உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
1O) அதனால் புத்தகம் படித்து கொண்டு , மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
11) மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
12) துரியோதனன் இறுதிநாளன்று போருக்கு போகும் முன் தன் தாயிடம் ஆசி பெற செல்கிறான். எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் நிர்வாணமாக என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
12) அதன்படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
14) பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன், பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
15) குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து இப்படி சத்தம் வரு கிறது என்று கேள்வி கேட்கிறான் .
16) கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
17) அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
18) இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது பார்த்து உண்ணவேண்டும் .
19) கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் . வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும் இதற்க்கு தான் .
2O) அடுத்து மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
அன்பர்களே நீங்கள் உங்களால் முடிந்ததை கடைபிடித்து, வாழ்வில் சகல வளமும் பெறுங்கள்.