திருவனந்தபுரம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக கேரள மாநில இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சியின் மாநில செயலாளர் கொயேரி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி கேரள தங்கக்கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் செயலாளர் சிவசங்கரன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையின்போது, சிவசங்கர் தங்கக்டத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. இது ஆளும் கட்சிக்கும், இடது முன்னணி அரசுக்கும் கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது.
இந்த தொடர்பான விசாரணையில், இந்த கடத்தல் தொடர்பாக முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு தெரியும் என்று, ஸ்வப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதையடுத்து, முதல்வர் அலுவலகத்தை சேர்ந்த மேலும் சில முக்கிய அதிகாரிகளிடமும் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நாடு முழுவதும் போதைப்பொருள் வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், போதைபொருள் கடத்தலில் கேரள மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பீனிஷ்க்கும் தொடர்ந்து இருந்ததை கண்டுபிடித்தனர். போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பீனிஷ் பண உதவி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவரை விசாரணைக்காக பெங்களூரு அழைத்துச் சென்ற போதைப்பொருள் கடத்தல் பிரிவு காவல்துறையினர் , அங்கு கைது செய்தனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கொடியேறி பாலகிருஷ்ணன் தனது மாநில செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே கொடியேரி பாலகிருஷ்ணனின் மற்றொரு மகனான பினோய் கொடியேரி. இவர், மும்பை பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 6 ஆண்டுகள் தம்பதியர் சகிதமாக வாழ்ந்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருப்பதும், துபாயில் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் ரூ.13 கோடி ஏமாற்றியதாக பினோய்க்கு எதிராக மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பினோய் துபாய் வர அந்நாட்டு நீதி மன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலியல் வழக்கு: கொடியேறி பாலகிருஷ்ணன் மகனை விசாரிக்க மும்பை போலீசார் கேரளா வருகை