தல அஜீத் நடித்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் ஆனது. தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச்.சினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக் கும் நிலையில் கொரோனா தொற்று ஊரடங் கால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. தடைக்காலம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்.
இந்நிலையில் அஜீத் நடிக்கும் 61வது படத்திற் கான ஸ்கிரிப்ட் ரெடி செய்யும் பணியில் பட நிறுவனம் ஒன்று ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் அஜீத் நடித்த 2 படங்களை தயாரித்திருக்கிறது. அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜீத்தின் 61வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணு பேட்டி களின்போது ராஜேந்திர சோழன் சரித்திர பின்னணியிலான கதை ஒன்றை உருவாக்கி வருகிறேன். அதில் ராஜேந்திர சோனழாக அஜித் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் அஜீத்தை வைத்து இக்கதையைத்தான் இயக்கப்போகி றாரா என்பது உறுதியாகவில்லை.