ஸ்லாம்பாத்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சமூக ஊடகங்களை நிரந்தரமாகத் தடை செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறி உள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கிஅனைத்து சமூக ஊடக தளங்களையும் முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மசோதாவில்

“இளம் தலைமுறையினரை சமூக ஊடக தளங்கள் மோசமாகப் பாதிக்கின்றன. நமது மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான நடைமுறைகளை வளர்ப்பதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன .

ராணுவத்திற்கு எதிரான எதிர்மறையான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரத்தின் மூலம், நாட்டின் நலன்களுக்கு எதிராக இந்த தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து இளம் தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூடியுப் ஆகியவற்றைத் தடை செய்யும்படி இந்த நாடாளுமன்றம் அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்” 

என மசோதாவில் கோரப்பட்டுள்ளது.

நாளை பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலைத் தாமதப்படுத்தக் கோரி பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானத்தால் அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் வரும் 11-ம் தேதி அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது.