மெலின்டா – பில் கேட்ஸ் தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பது கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.

மனக்கதவை மூடியதோடு கேட்ஸ்சுடன் 27 ஆண்டுகள் குடும்பம் நடத்தியதற்கான கணக்கை பைசல் செய்ய வேண்டி பத்துலட்சம் கோடி ரூபாய் சொத்தில் தனக்கு வர வேண்டிய தொகைக்கான பில் அனுப்பி இருக்கிறார் மெலின்டா.

பில் கேட்ஸ் – மெலின்டா

மெலின்டாவை கரம்பிடிப்பதற்கு முன் வின்பிரெட் என்ற மென்பொறியாளருடன் பில் கேட்ஸுக்கு இருந்த தொடர்பு பற்றி தற்போது தெரியவந்திருப்பது இவர்களின் விவாகரத்து விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1994ல் மெலின்டாவை திருமணம் செய்வதற்கு முன் தன்னை விட ஐந்து வயது மூத்தவரான, ஆன் வின்பிரெட் என்ற மென்பொறியாளருடன் நட்பில் இருந்தார்.

வின்பிரெட்டுடன் தனது விடுமுறையை அமெரிக்காவின் பல்வேறு உல்லாச விடுதிகளில் ஒன்றாக கழித்த பில் கேட்ஸ் திருமணத்தின் போது மெலின்டாவிடம் ஆண்டுக்கு ஒருமுறை தான் வின்பிரெட்டுடன் சில நாட்கள் இருக்க சம்மதிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள தனக்கு சொந்தமான உல்லாச விடுதியில் பில் கேட்ஸுடன் விடுமுறையை அனுபவித்து வந்ததார் வின்பிரெட். இவரது கணவர் எட்வர்ட் அலெக்ஸ் கிளென் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தின் முதலாளி என்பது குறிப்பிடதக்கது.

இந்த விவகாரம் தற்போது அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், “உனக்கு ஏற்றவர் மெலின்டா தான் உன் அறிவுப்பசிக்கும் அறிவுசார் சொத்தை வளப்படுத்தக் கூடியவரும் அவர்தான், நீ அவரையே திருமணம் செய்துகொள் என்று எங்கள் திருமணத்திற்கு பச்சைகொடி காட்டியதே வின்பிரெட் தான்”

மேலும், “எனது பயோடெக்னாலஜி உள்ளிட்ட புதிய தொழில் குறித்த விவரங்களை மட்டுமே அவருடன் தனிமையில் விவாதிப்பேன், எங்களுக்குள் எந்த ஒளிவு மறைவும் இல்லை, அவர் எனது சிறந்த நண்பர்” என்று பில் கேட்ஸ் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்று டைம்ஸ் இதழ் தகவல் வெளியிட்டிருக்கிறது.