இணையதளங்களில் வைரலாகும் 48ஆண்டுகளுக்கு முந்தைய பில்கேட்ஸ் பயோடேட்டா…

Must read

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் 48 ஆண்டுகளுக்கு முந்தைய தனது பயோடேட்டா இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தற்போதைய இயந்திர உலகில், ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு வேலையை தேர்ந்தெடுக்க, தங்களுடைய சுயவிவரக் குறிப்பு (BioData – Resume) அவசியமாகிறது. அதில், தங்களுடைய திறன்களை “பளிச்’சென்று தனியே தெரியும்படி சுட்டிக்காட்டுவதுடன், தங்களுக்கான பணி உறுதிக்கு தூண்டுகோலாவும் ஒருவருடைய பயோடேட்டா பயன்படுகிறது. இதுவே வேலை தேடுபவர் குறித்து, குறிப்பிட்ட நிர்வாகத்துக்கு  அறிமுகத்தை வழங்குகிறது.

இந்த நிலையில், தற்போது 66 வயதாகும் உலகின் 4வது பணக்காரரான பில்கேட்ஸ், 48 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தனது 18வது வயதில் முதன்முதலாக வேலைக்காக அவர் தயாரித்த Resume-ஐ தற்போது வெளியிட்டுள்ளார். அது குறித்த தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார். அதில்,   “எனது பயோடேட்டா-வை விட தற்போது இருக்கும் இளைஞர்களின் பயோடேட்டா நன்றாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். நீங்கள் சமீபத்திய பட்டதாரியாக இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததை விட உங்கள் விண்ணப்பம் மிகவும் நன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த பயோடேட்டாவில்,  அவரது பெயர் வில்லியம் எச். கேட்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இயக்க முறைமைகள் அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கணினி வரைகலை உள்ளிட்ட கல்வி தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹார்வர்ட் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் போது இந்த Resume தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.  இந்த Resume  தற்போது வைரலாகி வருகிறது.

More articles

Latest article