ஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5 பேர் பலி

Must read

ரியாத்: ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் இன்று அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமான ஈரானில் 5.7 முதல் 6.0 ரிக்டர் அளவுகோலில் இருந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த இந்த நடுக்கதால் 5 பேர் பலியாகி உள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான்  நாட்டின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் இன்று அதிகாலை   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதில் மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சயே கோஷ் என்ற கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. . 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரானின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு 6-ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கமான அண்டை நாடுகளான பக்ரைன், சவூதி, ஒமன், பாகிஸ்தான், கத்தார், ஆப்கானிஸ்தான் உள்பட பல நாடுகளிலும் எதிரொலித்தது.

More articles

Latest article