சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் பலவித திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.  சுவாதியின் நண்பர் என்று கூறப்பட்ட பிலால் மாலிக், சுவாதியின் காதலர் என்று ஒரு தகவலை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் (வின்சன்ட் ராஜ்),   தெரிவித்துள்ளார்.
“பிலால் மாலிக்கை சுவாதி பதிவித்திருமணம் செய்துகொண்டார். கொலை செய்யப்பட்டபோது அவர் ரமலான் நோன்பு இருந்தார்” என்று பிரபல பேஸ்புக் பதிவர் தமிழச்சி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த  கதிர் (வின்சன்ட் ராஜ்) , “ ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கான போதிய ஆதாரம் காவல்துறையிடம் இல்லை. காவல்துறை ராம்குமார், பிலால் மாலிக் தவிர வேறு எங்கும் விசாரணையை விரிவுபடுத்தாமல் உள்ளனர்.

சுவாதி - பிலால் மாலிக்
சுவாதி – பிலால் மாலிக்

சுவாதியும், அவரது ஆண் நண்பருமான பிலால் மாலிக்கும் காதலித்து வந்தார்கள் என்பதை காவல்துறையே அதனை ஒப்புக்கொண்டது.  . சுவாதியும், பிலால் மாலிக்கும் காதலித்து வந்தது அருகில் இருந்த அனைவருக்கும் தெரியும். சுவாதி ரமலான் நோம்பு இருந்தார்” என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதியே தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் சுவாதி மரணம் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்.  சுவாதி – பிலால் காதல் குறித்தும், சுவாதி நோன்பு இருந்தது குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த பதிவில் தமிழச்சி தெரிவித்திருந்ததாவது:
“சுவாதியின் படுகொலை செய்தி வெளியான தருணத்தில் அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டேன்.  சுவாதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சினிமா காட்சியை சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில் ஹீரோயின் சரிதா, ‪‎இந்து மதத்தை சேர்ந்தவர். ஹீரோ‪ ‎கிறிஸ்துவமதத்தைச் சேர்ந்தவர்.  . சரிதாவை தன்னுடைய  வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துகிறார்.
டைனிங் டேபிளில் ஹீரோவின் அப்பா ‪ ‎ப்ரேயர் பண்ண சொல்கிறார். சரிதா  இந்து மந்திரத்தை உச்சரிக்கிறார். அதிர்ச்சி அடைந்த ஹீரோவின் அப்பா ஒரு கட்டத்தில் சரிதாவை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொல்கிறார். அன்று இரவு அவர்கள் வீட்டில் தங்கும் சரிதா அதை நினைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தக் காட்சியை சுவாதி ஏன் பதிவு செய்திருக்கிறார்? என்ன நோக்கமாக இருக்கும் என்று அப்போது சந்தேகமாக இருந்தது (அந்த படத்தின் பெயர் தெரியவில்லை)
ஆனால் பத்திரிகையில் வெளிவராத செய்தி ஒன்று…    சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது  ரிஜிஸ்டர் மேரேஜ் என்றும் கூறுகிறது. அவர் கொல்லப்படும் போது ‪ரமலான் நோம்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனே இந்த கொலையை சுவாதியின் கணவர்தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவதைவிட, இது ஏன் ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவனிக்கத் தவறுகிறோமா? அல்லது தவிர்க்கிறோமா?
ஏற்கனவே திருமணமாக கதையை ஏன் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டும்? அப்படியானால் சுவாதியின் பெற்றோருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஏன் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது?
இன்று கொலை குற்றம் சாட்டப்பட்ட  ‪  ராம்குமார், ‘நான் சுவாதியை பார்த்தது கூட இல்லை’ என்று கதறி அழுகிறார்.
ராம்குமார் போன்ற ஏழை இளைஞர்களை ‪ மேட்டுக்குடிமனநிலை கொண்ட சுவாதி போன்ற பெண்களுக்கு தன் கணவனாக நினைத்துக்கூட பார்க்க முடியாத தோற்றத்தை கொண்ட ராம்குமார்களை புறக்கணிக்கும் சமூகமே நம்முன் நிற்கிறது.
மேட்டுக்குடிகளுக்கு, ராம்குமார்களை கொலைக்காரன்களாக்க மாற்ற முயலும் அகங்காரத்தையும், ஆணவத்தையும், அதிகாரத் திமீரையும் பொருளாதாரமும் சாதியும் கொடுக்குமானால் அது சட்டத்திற்கு புறம்பான குற்றம் என்று வாதிட இன்னமும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்” – இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் தமிழச்சி.