திருச்சி:
பதவிக்காக பைக்-ஐ எரித்த தில்லாலங்கடி ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவரின் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணையில், தனது அமைப்பில் பதவி கிடைப்பதற்காக அந்த பிரமுகரே பைக்கை தீ வைத்து எரித்துவிட்டு, அதை மற்றொரு அமைப்பினர் எரித்ததாக கூறி நாடகமாடியது தெரிய வந்ததுள்ளது.

திருச்சி புறநகர் பகுதியான அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும், இவர் இந்து முன்னணி அமைப்பில் உறுப்பினராகவும், அந்த பகுதியின் ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
கடந்த இரண்ட நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில், திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையம் வந்த சக்திவேல், தனது பைக்கை யாரோ தீ வைத்து கொளுத்தி விட்டதாகவும், இது பயங்கரவாதிகளின் நாச வேலையாக இருக்கலா புகார் கொடுத்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சக்திவேல், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திரட்டி போராட்டத்தையும் நடத்தி மேலும் பரபரப்பை உண்டாக்கினார்.
காவல்துறையினரின் அதிரடி விசாரணை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா உதவிகளுடன் நடத்திய விசாரணையில், சக்திவேலின் மற்றொரு கூட்டாளியான சக்திவேல், அவரது நண்பர் ஆகியோர் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி பைக்கை கொளுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், சக்திவேல் இந்து முன்னணி அமைப்பில் உயர்பதவிகளை அடைவதற்காகவும், தனது இருசக்கர மோட்டார் வாகனத்தின் மீதான கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காகவும் இந்த தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
[youtube-feed feed=1]