பாட்னா: பீகார் தலைமைச் செயலாளர் அருண்குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பீகார் மாநில தலைமைச் செயலாளராக கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டவர் அருண் குமார் சிங். இவர்  கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.

அருண் குமார் சிங்  இந்திய ஆட்சிப் பணியில் 1985ஆம் ஆண்டு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]