பாட்னா

பீஹார்மாநில பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வின் வினாத்தாள் வெளியானது தொடர்பாக அந்த வாரியத்தின் தலைவர் சுதிர்குமார் கைதுசெய்யப்பட்டார். இதேபோல் பீஹாரில் நிகழ்ந்த படகுவிபத்தை காரணம் காட்டி சோன்பூர் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி முகம்மது அலி அன்சாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவங்கள் பீஹார் ஆட்சியர்கள் மற்றும் அரசுத் துறை செயலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில் நேற்று மாநில ஆளுனர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த ஐஏஎஸ் அதிகாரிகள்,  முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவை செயல்படுத்தமுடியாது என்றும் அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாகவும் அச்சமின்றியும் செயல்பட பாதுகாப்புத் தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் பீஹார் மாநில பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சுதிர்குமாரை விடுதலை செய்ய வேண்டும், காவல் அதிகாரி முகமது அன்சாரிக்கு எதிரான பணியிடை நீக்க ஆணையை திரும்ப பெறவேண்டும்  உள்ளிட்ட  கோரிக்கை விடுத்தனர்.