அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில்.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 19ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது .
இப்படம் தீபாவளியன்று வெளியாக இருக்கும் இந்த நிலையில், படத்தின் டீசர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். இதற்கிடையே, தற்போது டீசரின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடைபெற்று வருவதால் டீசர் வெளியீட்டில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டீசர் வெளியான சில நாட்களில் டிரைலரையும் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு அந்த டிரைலரில் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளதாம்.