விஜய்க்கு சுஷாந்த் ஸ்டைலில் ’பிகில்’ பட லுக்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்..

Must read

டிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் பிகில். அட்லீ இயக்கி இருந்தார். அர்சன்னா கல்பாதி தயாரித்தி ருந்தார். பிகில் படத்தில் விஜய் நடித்த ராய்யப்ப ரவுடி பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு ரசிகர் அந்த தோற்றத்தில் சிலை அமைத்திருந்தார்.


ராய்யப்பன் தோற்றம் பற்றிய சீக்ரெட் ஒன்றை அர்ச்சனா கல்பாதி தெரிவித்தார். அவர் கூறும்போது,’பிகில் படத்தில் விஜய் ஏற்ற ராயப்பன் வேடத்தில் முதலில் அவர் நடிப்பதாக இல்லை. அந்த கெட்டபோட்டு யாரை வேறு நடிகரை நடிக்க வைக்க ஆலோ சித்தபோது மும்பை மேக்கப்மேன் ஒருவர் சிச்சோரே படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் போட்டிருந்த வித்தியாச மான மேக்கப் படத்தை காட்டினார். அதன் பிறகு விஜய்க்கு அந்த மேக் அப் அணிந்துபார்த்த்போது பொருத்தமாக இருந்தது. பின்னர் விஜய்யே ராயப்பன் பாத்திரத்திலும் நடித்தார்.அது நல்ல வரவேற்பை பெற்றது.
இவ்வாறு அர்ச்சனா கல்பாதி கூறினார்

More articles

Latest article