
கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 தாமதமாகியுள்ளது.
பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது. பிக் பாஸ் 5ம் சீசன் ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. கமல் ஹாசன் ‘ஆரம்பிக்கலாமா’ என கேட்டிருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களாக தமிழகத்தின் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்கள் உலா வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ முதல் ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 😀 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/c6z5vIflF5
— Vijay Television (@vijaytelevision) September 3, 2021