கடந்த 2017-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’.100 நாட்கள் ஒரு வீட்டுக்குள் எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி. அத்துடன், வீட்டுக்குள்ளேயே பல போட்டிகளும் நடத்தப்படும். 2018 ஆம் ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை, கடந்த இரண்டு வருடங்களாக கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், ‘பிக் பாஸ் 3’ இந்த ஆண்டு ஒளிபரப்பாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 23-ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது . ‘இது வெறும் ஷோ அல்ல… நம்ம லைஃப்’ என்ற வாசகத்துடன் இம்முறை ஒளிபரப்பாகிறது ‘பிக் பாஸ் 3’.
கடந்த இரு சீசன்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தன. ஆனால் இம்முறை நிகழ்ச்சியின் தொடக்க நாள் ஒளிபரப்பு இரவு 8 மணிக்கு என விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாளில் இருந்து இரவு 9.30 மணிக்கு தான் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9.30 முதல் 11 மணி வரை