Bigg Boss Tamil 5 : பிரியங்காவை நாமினேட் செய்யும் ராஜு…..!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.

முதல் ப்ரோமோ : அதில் போட்டியாளர்கள், பாவனி, இசை, சின்னப்பொண்ணு உள்ளிட்டோரை நாமினேட் செய்கின்றனர். கடைசியாக கன்பெஷன் ரூமுக்குள் இருக்கும் ராஜு, சின்னப்பொண்ணுவை நாமினேட் செய்து விட்டு, கதவை திறந்து பிரியங்காவின் முழு பெயரை கேட்கிறார். வெளியில் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள்.

இரண்டாவது ப்ரோமோ : வீட்டின் இரண்டாவது தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்கில் அபிஷேக் மற்றும் நிரூப் ஆகியோர் பெண்கள் உடையை அணிந்துள்ளனர். “என்ன பீலிங்” என்ற பெயரில் தொடங்கும் டாஸ்கில் ஒருவரின் உணர்வுகளை தூண்ட வேண்டும் என கூறப்படுவது தெரிகிறது.

மூன்றாவது ப்ரோமோ : முதலில் என்ன செய்தாலும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் அண்ணா, என வருண் கூறுகிறார். அதற்கு இமான், சிரிக்க வைக்க மட்டும் முயற்சி செய்யுங்கள் தம்பி என்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத வருண் சிரிக்க மட்டும் அல்ல, கோபப்படுத்தலாம், அழ வைக்கலாம், வெறுப்பேத்தலாம் என்கிறார். இதனால் இமான் அங்கிருந்து கோபமாக செல்லும் நேரத்தில் குறுக்கிடும் அபிஷேக், ஒட்டுமொத்த டாஸ்க்கையும் சொதப்பிவிட்டீர்கள், இனிமேல் என்ன செய்வது என்கிறார்.

 

More articles

Latest article