பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர். இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா , சின்னப்பொண்ணு , சுருதி என பிக் பாஸ் வீட்டை விட்டு ஐந்து பேர் வெளியேறினர்.

இந்த வாரம் வானம் ஆற்றலுக்கான சக்தி. இந்த வாரம் முழுக்க பாவனிக்கு லிவ்விங் ஏரியாவில் முன்னுரிமை அளிக்கப்படும். உதவியாளராக தாமரையை தேர்வு செய்தார் பாவனி.

இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் விட்டில் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. செண்பகமே செண்பகமே, நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்குகள் சுவாரசியத்தை கூட்டின. அதுமட்டுமில்லை இந்த டாஸ்கில் பலரின் உண்மை முகங்களும் வெளியே தெரிந்தன.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வில் கமல்ஹாசன் செண்பகமே செண்பகமே மற்றும் நீயும் பொம்பை நானும் பொம்பை டாஸ்கில் நடைப்பெற்ற சண்டை காட்சிகளை திரையில் ஓட வைத்து, வரம்புக்கும், எல்லைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இவர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்கிறார்.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ள 7 நபர்களில் 3 பேர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இமான் அண்ணாச்சி, பாவணி, மற்றும் மதுமிதா ஆகியோர் தான் அந்த மூவர். இவர்களின் ஜெர்மனியை சேர்ந்த மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா தான் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.