சென்னை:

கிராமங்களளுக்கு இணையவசதி செய்வது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட  ரூ.200 கோடி டெண்டரை முறைகேடு  காரணமாக மத்தியஅரசு  ரத்து செய்துள்ளது  மாபெரும் வெற்றி என்று  அறப்போர் இயக்கம் தெரிவித்து உள்ளது.

கிராமப்பகுதிகளுக்கு பைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி  செயல்படுத்தும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி,  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் கேபிள் பதிக்க ரூ.2000 கோடி அளவிலான டெண்டர் கோரப்பட்டது. இதில் தமிழக அரசு முறைகேடு செய்துள்ளதாக  அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு கூறியது.

இதுதொடர்பாக தமிழக தமிழக முதல்வர், தலைமை செயலாளர் மற்றும் மத்திய அரசின் தொலை தொடர்பு செயலாளர், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் காம்படிஷன் கமிஷனிடம் ஏற்கனவே 19/04/2020 தேதியில் புகார் அளித்திருந்தது. ஆனால், அதற்கு   அமைச்சர் உதயகுமார் அவர்கள் எந்த முறைகேடும் நடை பெறவில்லை  மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக திமுக வழக்கும் போட்டது. இதையடுத்து, மத்திய தகவல் தொர்பு துறையின் டிபிஐஐடி, டெண்டரை ஒத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த ரூ  200 கோடி டெண்டரை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது தமிழக அரசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம் நிர்வாகி, அறப்போர் இயக்கத்தின் ஆதாரப்பூர்வமான புகாருக்குப் பிறகு ரூ .2000 கோடி பாரத்நெட் டெண்டரை ரத்து செய்வதற்கான உத்தரவை டிபிஐஐடி வெளியிட்டுள்ளது.  தமிழக அரசால் கோரப்பட்ட சட்ட விரோத டெண்டரை ரத்து செய்திருப்பதன் காரணமாக, மாபெரும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பொதுக் கருவூலப் பணத்தை மோசடி செய்யாமல் காப்பாற்றியுள்ளது.  இதில் அறப்போருக்கு மாபெரும் வெற்றி என்று தெரிவித்து உள்ளது.