கடந்த ஆண்டு விஜய் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதுகுறித்த டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் கமல் வெளியிட்டு உறுதி செய்தார்.
இந்நிலையில், பிக்பாஸ்-2-ல் கலந்துகொள்பவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. இது குறித்து ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொருவருடைய பெயரை முன்னிலைப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் பொதுமக்களிடையே பிரபலமாகி சினிமா வாய்ப்புகள் மற்றும் பல வாய்ப்புகளை பெற்றுள்ள நிலையில் பிக்பாஸ்-2ல் கலந்துகொள்ள தற்போது மார்க்கெட் இல்லாத சினிமா நடிகர்கள், நடிகைகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. அதுபோல சின்னத்திரை பிரபலங்களும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ்-2ல் கலந்துகொள்ளும் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ள பிக்பாஸ்-2 நிகழ்ச்சி ஜுன் 25 அன்று தொடங்குவதாக தெரிகிறது. அன்று முதல் செப்டம்பர் 30 வரை 100 நாட்கள் ஒளிபரப்பாக விருக்கிறது.
மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த விவரம் விரைவில்….