
கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக பல படங்கள் OTT ல் வெளிவர தொடங்கியுள்ளது .
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்பு ஓடிடி வெளியீடு என்ற ரீதியில் பேச்சுவார்த்தையில் இறங்கின.
லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டெட்லி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தை ஓடிடி வெளியீட்டுக்குக் கைப்பற்ற பல்வேறு முன்னணி ஓடிடி தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், எதுவுமே இறுதிக்கட்டத்தை எட்டவில்லை. தீபாவளிக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி வெளியீடு எனத் திட்டமிட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பொங்கலுக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும். அதோடு படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில தினங்களில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வெளியிடும் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]