
திருவனந்தபுரம்,
நடிகை பாவனா பாலியல் வழக்கு காரணமாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பாவனா ஒரு பட சூட்டிங்கில் கலந்துகொண்டு விட்டு திரும்பும்போது, மர்ம நபர்களால் அவர் காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பாவனாவின் கார் டிரைவர்கள் ‘பல்சர்’ சுனில், வினீஸ் உட்பட ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதில் பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து நடிகர் திலீப்பிடம் ஏற்கனவ போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் திலீப் தனது மனைவி காவ்யா மாதவனுடன் தலைமறைவானார்.
இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் நேற்றும் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
[youtube-feed feed=1]