சென்னை: தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான ஏஜென்சிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  அது தொடர்பான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதியை ஏற்படுத்த பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு செயற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஏற்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் கையெழுத்தானது.

ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது,  கிராமப்புற பகுதிகளுக்கு  அதிவேக இணையதள சேவை  வழங்கும் பாரத் நெட் திட்டத்தில் 2ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற உள்ளதாக கூறி, தமிழகஅரசின்  டெண்டர்களை மத்தியஅரசு அதிரடியாக  ரத்து செய்தது.

அதைத்தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பாரத்நெட் திட்டம் கொண்டுவரும் முயற்சி எடுத்தது. அதன்படி ரூ.1230 கோடி மதிப்பில், 12,525 கிராமங்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில்,  அதன் அடுத்தக்கட்ட பணியாக,  அனைத்து மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது, இந்த திட்டத்திற்கான  ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் அறிவிக்கப்ட்டுள்ளது.