கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாறன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘டி44’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.
நான்காவது முறையாக தனுஷ் – மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ் தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஹன்சிகா ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.