சென்னை:

காவிரி மேலாண்மை வாரிய அமைக்காததை கண்டித்து இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் சென்னையில் நடந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன், வெற்றிமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிட்லபாக்கம் வெங்கட்ராமன் நகர் 4-வது தெருவில் உள்ள ஜெயலட்சுமி ராமநாத மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

பாரதிராஜாவை மட்டும் விடுவித்து சீமான், அமீர், கவுதமன், வெற்றிமாறன் ஆகிய மூவரையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு பாரதிராஜா மறுத்தனர். சீமான் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று பாரதிராஜா கூறி விடுதலையாக மறுத்தார். பாரதிராஜாவுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.