கொல்லம்: இந்திய ஒற்றுமைக்கான பாரத ஜோதோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, இஇன்று 10வது நாளாக கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய பாதயாத்திரையின்போது ராகுலுக்கு கேரள மூதாட்டி ஒருவர், பனை ஓலையில் தான் நெய்த அழகான ஓலைப் பாயை பரிசளித்து மகிழ்ந்தார். அவரை கட்டியணைத்து ராகுல் நன்றி தெரிவித்தார். அதுபோல சாமியாரினி அமிர்தானந்தமயிமாவையும் சந்தித்து ஆசி பெற்றார்.
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் மீண்டும் எழுச்சி பெறும் நோக்கில், ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயண தேசிய ஒற்றுமை யாத்திரை தொடங்கியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து 7ம் தேதி யாத்திரை தொடங்கியது, தமிழகத்தில் 4 நாட்கள் நடைப்பயணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பாதயாத்திரை ராகுல் மேற்கொண்டு வருகிறார், திருவனந்தபுரம் கணியாபுரத்திலிருந்து பயணம் தொடங்கியது, மழையை பொருட்படுத்தாமல் ராகுல் பாதயாத்திரை குழுவினருடன் வீரு நடை போட்டு வருகிறார். இன்று 10வது நாளாக கேரள மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
10வது நாளான இன்று கேரள மாநிலத்தில் கொல்லம் தாண்டி, கருநாகப்பள்ளி அருகே உள்ள புதியகாவு சந்திப்பில் இருந்து தொடங்கினார். முன்னதாக அவர், கேரளாவைச் சேர்ந்த பிரபல பெண் சாமியார், அமிர்தானந்தமயிமாவைச் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டபோது, அந்த பகுதியைச் சேர்ந்த வயதான பாட்டி ஒருவர், தனது கையினால் நெய்த பனை ஓலைப்பாயை, ராகுல்காந்திக்கு வழங்கி மகிழ்ச்சி அடைந்தார். அந்த பாட்டியை ராகுல்காந்தி நெகிழ்ச்pசயுடன் கட்டிணயைத்து நன்றியை தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.