டில்லி

ரிலையன்ஸ் ஜியோ டிஷ் டிவி முன்பதிவு செய்வதாக போலி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சேவை நாட்டின் 99% இடங்களுக்கு மேல் உள்ளது. ஜியோவின் 4 ஜி சேவையை அநேகமாக பலர் உபயோகித்து வருகின்றனர். ஜியோ அறிவித்துள்ள ஜியோ ஜிகாஃபபர் இண்டர்நெட் சேவைக்காக மக்கள் காத்திருக்கின்றனர். இந்த சேவையில் இணையத்துடன் தொலைக்காட்சி ஓளிபரப்பும் இணைக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.

மக்களின் இந்த எதிர்பார்ப்பை பயன்படுத்தி ஒரு சில விஷமிகள் ஜியோ டிடிஎச் சேவைக்கு முன்பதிவு என ஒரு இணைய தளத்தை தொடங்கி உள்ளனர். இதைப் போல் ஒரு இணைய தளத்தை வாட்ஸ்அப் தகவல் மூலம் நாமும் பார்க்க நேர்ந்தது. அந்த இணைய தளத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ டிஷ் டிவி சேவைக்காக முன்பதிவை தொடங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள்து.

ஜியோ என்பது ரிலையன்ஸ் நிறுவனம் என்பதும் டிஷ் டிவி என்பது ஜீ தொலைக்காட்சி குழுமத்தின் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பலரும் அறிந்ததே. ஆனால் இந்த இரு பெயர்களையும் இணைத்து புதிய நிறுவனமாக்கி இந்த இணைய தளத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் போலி ஆனது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த தளத்தில் ஜியோ என்னும் பெயர் கொண்ட டிஷ் ஆண்டெனா மற்றும் அதே பெயருடன் செட் டாப் பாக்ஸ் காணப்படுகிறது. அதனால் இதை நம்பி பலரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை இங்கு பதிந்து விடுகின்றனர். இதன் மூலம் தொலைபேசியில் உள்ள விவரங்களை திருடுவது எளிதாகும். எனவே இதை படிக்கும் யாரும் இந்த இணையதளத்தில் விவரங்களை பதிய வேண்டம் என கேட்டுக் கொள்கிறோம்.

அந்த இணைய தளத்தின் பெயர் : customertollfreeinfo.in/jiodth

 

நன்றி : தி குவிண்ட்