சென்னை: விக்கிரவாண்டியை போல 2026 சட்டமன்ற தேர்தலையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பாரா? என்றும் எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி என்றும் எனவும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வசை பாடி வருகின்றனர். நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாவது இடித்து பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுகவை அண்ணாமலை மட்டம் தட்டி பேசி வருகிறார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் ஒதுக்கி இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை சுட்டிக்காட்டி பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதனால் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை மெத்த ஜானி, அவர் வந்த பிறகுதான் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது, அவர் மற்ற கட்சிகளை விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என நக்கலாக பேசினார்.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளராக ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலையை செய்தியாளர்கள் சந்தித்து எடப்பாடி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,
சிலரின் சுயலாபம் மற்றும் அதிகாரத்திற்காக கரையானைப் போல அ.தி.மு.க.வை அழித்து கொண்டிருக்கிறார்கள் என்றவர், எடப்பாடி தலைமை யிலான அ.தி.மு.க. 2019 முதல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. என்றவர், நம்பிக்கை துரோகி என்ற பட்டம் எடப்பாடி பழனிசாமிக்குதான் சரியாக பொருந்தும் என காட்டமாக கூறியவர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என பேச சொன்னார் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அதிம ஆளும் கட்சியாக இருந்தபோதே பல தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிப்பதாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா? என கேள்வி எழுப்பியதுடன், 2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா?, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன் என கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார் என்றவர், புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் எடப்பாடி தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை என்றார்.
பீகார், கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போது தமிழக அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்? என்ற அண்ணாமலை, பீகாரில் அனுமதி உள்ளபோது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லையா? தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தி.மு.க. அரசு தயாராக இல்லை என்பதே உண்மை என்றும் கூறினார்.
‘அண்ணாமலை அரசியல் ஞானி’ – மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்! எடப்பாடி பழனிசாமி